அமெரிக்காவில் மின்சார கார்களை தயாரிக்க ரூ.80,000 கோடி முதலீடு செய்கிறது போர்டு
இந்தியாவில் தனது உற்பத்தி ஆலைகளை மூடுவதாக அறிவித்துள்ள போர்டு கார் நிறுவனம், அமெரிக்காவில் சுமார் 83 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார கார் உற்பத்திக்கான 4 ஆலைகளை நிறுவி 11 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புக்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தனது உள்ளூர் உற்பத்தி ஆலைகளை மூடி, விலை அதிகமான ஹை-என்ட் மாடல்களை இறக்குமதி செய்து விற்பதாக அறிவித்ததற்கு முரணாக போர்டின் இந்த அறிவிப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
அமெரிக்காவில் துவங்க உள்ள மின்சார் கார் ஆலைகளில் போர்டு 51 ஆயிரம் கோடியை முதலீடு செய்யும் எனவும் அதன் கொரிய கூட்டாளியான எஸ்.கே.இன்னவேஷன் நிறுவனம் எஞ்சிய தொகையை முதலீடு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் துவக்கப்பட உள்ள புதிய ஆலைகள் போர்டின் 118 ஆண்டு கால வரலாற்றில் மிகப்பெரிய, நவீன, திறன்வாய்ந்த உற்பத்தி ஆலைகளாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
Comments