தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி

0 2748

தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 7ல் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகையில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த 3 புதிய மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 இடங்களில் மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூரில் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments