தொலைந்து போன 4 சவரன் பிரேஸ்லெட்டை சுமார் 6 மணி நேரம் தேடி கண்டுபிடித்துக் கொடுத்த போலீசார்
கும்பகோணத்தில் பெண் ஒருவர் சாலையில் தவறவிட்ட கைச்சங்கிலி எனப்படும் பிரேஸ்லெட்டை சுமார் 6 மணி நேரம் தேடிக் கண்டுபிடித்து போலீசார் அவரிடம் ஒப்படைத்துள்ளனர். சோழபுரத்தைச் சேர்ந்த பானு என்ற அந்தப் பெண், கும்பகோணத்திலுள்ள துணிக்கடை ஒன்றில் துணிகளை வாங்கிக்கொண்டு பேருந்து நிலையம் நோக்கிச் சென்றுள்ளார்.
அப்போது அவர் கையில் அணிந்திருந்த 4 சவரன் பிரேஸ்லெட் தொலைந்து போயிருக்கிறது. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத நிலையில், பிரேஸ்லெட் இல்லாமல் சென்றால் வீட்டில் திட்டு விழும் என்ற பயத்தோடு மேற்கு காவல் நிலையம் சென்று ஆய்வாளர் பேபியிடம் நடந்ததைக் கூறியிருக்கிறார்.
அவரும் உடனடியாக காவலர்களை அனுப்பி தேடச் சொல்லவே, சுமார் 6 மணி நேர தேடலுக்குப் பின் சாலையோரம் பிரேஸ்லெட் கிடைத்துள்ளது. அதனைப் பெற்றுக்கொண்ட பானு, போலீசாருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
Comments