நாய் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்க தென்கொரியா முடிவு
தங்கள் நாட்டில் நாய் இறைச்சி உட்கொள்வதை தடை செய்ய தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் திட்டமிட்டுள்ளார்.
அந்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இறைச்சிக்காக 10 லட்சம் நாய்கள் கொல்லப்படுகின்றன. சமீபத்தில் தென்கொரிய மக்கள் நாய் இறைச்சியை உண்ணுவதைத் தவிர்த்து வருவதால் நாட்டின் மிகப் பெரிய 3 நாய் இறைச்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாய் இறைச்சி விற்பனை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தடைவிதிக்க தென் கொரிய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments