விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறை அதிகாரி காலில் வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கிய சம்பவம்
கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டத்தின் போது வேகமாகச் சென்ற காரை நிறுத்த முயன்ற காவல் அதிகாரியின் காலில் வாகனத்தில் சக்கரம் ஏறி இறங்கியது.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நேற்று விவசாய சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்தினர். அப்போது பெங்களூருவில் வடக்கு காவல் துணை ஆணையர் தர்மேந்திர குமார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அங்கு வேகமாக வந்த காரை அவர் நிறுத்த முயன்றபோது தர்மேந்திர குமாரை இடித்துத் தள்ளியதில், காரின் முன்சக்கரம் அவரின் பாதத்தில் ஏறி இறங்கியது. இதுகுறித்து புரோ கன்னட சங்கத்தின் உறுப்பினரான ஹரீஷ் கவுடா கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments