குலாப் புயலைத் தொடர்ந்து ஆந்திராவில் கனமழை... வெள்ளத்தில் மிதக்கும் கிருஷ்ணா, ஸ்ரீகாகுளம் மாவட்டங்கள்

0 2471

ஒடிசாவையும் ஆந்திராவையும் மிரட்டிய குலாப் புயல் கரையைக் கடந்து வலுவிழந்த நிலையில் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்த பிறகும் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாகுளம் பகுதிகளில் மழை நீடிப்பதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பல மணி நேரமாக நீர் வடியாததால் மக்கள் அன்றாடப் பணிகளை முடிக்க முடியாமல் அவதிக்கு ஆளாகினர். லாவேரு , ரணஸ்தலம், சிகடமண்டல் போன்ற பகுதிகளில் விளைந்த பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளானதாகத் தெரிவித்தனர்.

இதனிடையே அணை திறக்கப்பட்டதால், விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments