கொரோனா பரிசோதனையை விரைவாகவும் குறைந்த செலவிலும் செய்வதற்கான புதிய வகை RT-PCR பரிசோதனை முறையை கண்டறிந்த ICMR
கொரோனா பரிசோதனையை விரைவாகவும் குறைந்த செலவிலும் செய்வதற்கான புதிய வகை RT-PCR பரிசோதனை முறையை இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் கண்டறிந்துள்ளது.
பொதுவாக கொரோனா பரிசோதனைக்கு ஆர்.என்.ஏ என்ற பகுப்பாய்வு தேவைப்படுகிறது. இதனால் கொரோனா பரிசோதனை செய்ய செலவும் நேரமும் அதிகரிக்கிறது. இதனைச் செய்வதற்கு பயிற்சி பெற்ற நபர்களின் தேவையும் உள்ளது.இந்தப் புதிய உத்தி மூலம் ஆர்.என்.ஏ விலக்கப்படுகிறது என்று ஐ.சி.எம்.ஆர். நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய உத்தி கொரோனா பரிசோதனைகளை வேகப்படுத்துவதற்கான முக்கியமான ஒரு அடியாக கூறப்படுகிறது
Comments