செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும்… கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

0 1980

காவிரி கீழ்பாசன  மாநிலங்களுடன் ஒருமித்த கருத்துக்கு வந்தால் மட்டுமே மேகதாது குறித்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில்  விவாதிக்கப்படும் என ஆணைய தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படிவகுக்கப்பட்ட நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேகதாது அணை விவகாரத்தில் திட்ட அனுமதி தொடர்பான விவாதம் நடத்த கருப்பொருள் வைக்கப்பட்டபோதும், தமிழக அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அது தொடர்பான விவாதம் நடைபெறவில்லை.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு செப்டம்பர் மாதம் தர வேண்டிய நீரில் நிலுவையை கர்நாடகா உடனடியாக தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு அறிவுறுத்தப்பட்டது.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் உள்ளிட்ட கீழ் நீர்ப்பாசன மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று கர்நாடகா தரப்பில் வாதிடப்பட்டது. கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் அனைத்து மாநிலங்களும் ஒருமித்த கருத்தோடு தான் மேகதாது அணை விவகாரம் சம்பந்தமான விவாதத்தை கூட்டத்தில் மேற்கொள்ள முடியும் என்றும் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments