மாநிலங்களவை எம்பி தேர்தல் - திமுக வேட்பாளர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்வு
மாநிலங்களவைக்கு காலியாக இருந்த 2 இடங்களில் திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
23 ஆம் தேதி நடந்த வேட்புமனு பரிசீலனையில் திமுக வேட்பாளர்கள் தவிர அனைவரின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்து அதற்கான சான்றிதழ்களை அவர்களிடம் வழங்கினார்.
இதேபோல, புதுச்சேரி மாநிலங்களவை எம்பி பதவிக்கு செல்வகணபதியுடன், சுயேட்சை வேட்பாளர்கள் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். சுயேட்சைகளின் மனுக்கள் தள்ளுபடியான நிலையில், செல்வகணபதியின் மனு மட்டும் ஏற்கப்பட்டது. இந்நிலையில் அவர் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் நடத்தும் அதிகாரி முனுசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதுச்சேரியில் முதன் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பாஜகவைச் சேர்ந்தவர் தோர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments