வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனம் மீது குண்டர் சட்டம் பாயும் - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
வரி ஏய்ப்பு செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் பேசிய அவர், தமிழகத்தில் முக்கிய நகரங்களில் இயங்கும் துணிக்கடைகளுக்குச் சொந்தமான 115 இடங்களில் வணிகவரித்துறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் 101 கோடியே 49 லட்ச ரூபாய் அளவுக்கான வரி ஏய்ப்பு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறினார்.
நாளுக்கு நாள் வரி ஏய்ப்பு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது எனவும், அதற்காக துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து கொண்டு இருக்கிறோம் எனவும் அமைச்சர் மூர்த்தி கூறினார்.
Comments