பெங்களூருவில் பழமையான வீடு இடிந்து விழும் காட்சிகள்..!
பெங்களூருவில் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாத பழமையான வீடு ஒன்று இடிந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
வில்சன் கார்டன் பகுதியிலுள்ள 2 அடுக்குகளைக் கொண்ட அந்த வீடு, கடந்த 1962ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. உரிய முறையில் பராமரிக்கப்படாத அந்த வீட்டில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் 50க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கியிருந்தனர்.
கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் கனமழையில் வீடு ஆட்டம் காண ஆரம்பித்து இருக்கிறது. பல இடங்களில் விரிசல் விடத் தொடங்கியதும் உஷாரான தொழிலாளர்கள் இரவோடு இரவாக வீட்டைவிட்டு வெளியேறி இருக்கின்றனர். காலை 11 மணியளவில் வீடு மொத்தமாக இடிந்து விழுந்தது.
Comments