இந்தியா தனது ராணுவ வலிமையை அதிகரிக்காமல் இருந்திருந்தால்...? கார்கிலில் தோற்று கால்வனை இழந்திருப்போம்..! - ராணுவ துணை தளபதி

0 3756
இந்தியா தனது ராணுவ வலிமையை அதிகரிக்க தேவையான முதலீடுகளை செய்யாமல் இருந்திருந்தால், கார்கில் போர், கால்வன் மற்றும் டோக்லாம் மோதல்களின் போது தோற்றிருப்போம் என ராணுவ துணை தளபதி சி.பி.மொகந்தி கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பும் பெரிய சவாலாக மாறியிருக்கும் என்பதுடன், வடகிழக்கு மாநிலங்களில் நக்சல்களின் கொட்டம் அதிகரித்திருக்கும் என டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தெரிவித்தார்.

ராணுவத்திற்கு கூடுதல் பணம் செலவழிக்கப்படுவது குறித்த விவாதங்களுக்கு பதிலளித்த அவர், திபெத்திடம் வலிமையான ராணுவம் இருந்திருந்தால், அதை சீனா ஒருபோதும் ஆக்கிரமித்திருக்காது என்று விளக்கம் அளித்தார்.

டோக்லாம் மற்றும் கால்வன் தாக்குதல்களில் பெற்ற வெற்றி, சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெரிய அந்தஸ்தை தந்துள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments