ரஷ்ய கிராண்ட் பிரி கார் பந்தயம்: 100-வது வெற்றி பெற்று பிரிட்டன் ஹாமில்டன் சாதனை

0 2211

ரஷ்ய கிராண்ட்பிரி கார் பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ள பிரிட்டன் வீரர் ஹாமில்டன், 100வது முறையாக பார்முலா ஒன் போட்டிகளில் சாம்பியன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

சோச்சி  நகர ஓடுதளத்தில் கொட்டும் மழையின் இடையே நடந்த போட்டியில் பல்வேறு கிளப்புகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.

விறுவிறுப்பாக சென்ற பந்தயத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரிட்டன் வீரர் லன்டோ நோரிஸ் ((Lando Norris)), சாரல் மழையால் சற்று சறுக்கலை சந்தித்து ஓடுதளத்தை விட்டு விலகிச் சென்றார்.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட மற்றொரு பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் 1 மணி 30 நிமிடம் 41 விநாடிகளில் பந்தயத்தை கடந்து வெற்றி பெற்றார். இது அவரது 100-வது கிராண்ட் பிரி சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments