வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்

0 2029

மூன்று வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்ததன் ஓராண்டு தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில் டெல்லியின் முக்கியச் சாலைகள் அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த முழு அடைப்பை முன்னிட்டு பெங்களூருவில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து இன்று தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது என்றும், வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments