டெல்லியில் 6 வழிச்சாலைக்காக 2 ஆயிரம் மரங்களை அப்புறப்படுத்த முடிவு... இயற்கை ஆர்வலர்கள் கண்டனம்
டெல்லியில் 6 வழிச் சாலை அமைக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை அப்புறப்படுத்த முடிவெடுத்திருப்பதற்கு இயற்கை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் டெல்லி முதல் சஹரன்பூர் வரை 6 வழிச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தச் சாலைக்காக டெல்லி வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அக்சர்தாம் தேசிய நெடுஞ்சாலைக்கும் டெல்லிக்கும் இடையே இந்தப் பாதையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Comments