ஒகேனக்கலில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில், மடம் சோதனைச்சாவடி, ஒகேனக்கல் பேருந்து நிலையம் மற்றும் ஆலம்பாடி சோதனைச்சாவடி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா சோதனை செய்த பின்பே அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களுக்கு அருவி மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும், பரிசல்களில் சென்று சுற்றிப் பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கலில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
சுற்றுலா பயணிகள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments