எஸ்பிஐ வங்கியைப் போல் இந்தியாவுக்கு 5 பெரிய வங்கிகள் தேவை-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்தியாவில் வளர்ந்து வரும் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யப் பாரத ஸ்டேட் வங்கியைப் போல் 5 பெரிய வங்கிகள் தேவைப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய வங்கிகள் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், உடனடியாகவும், தொலைநோக்கிலும் வங்கிப் பணிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை வங்கியாளர்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். வங்கிகளை இணைக்கும் நடைமுறைக்கு அவற்றின் அமைப்பு ஒரு சிக்கலே இல்லை என்றும் தெரிவித்தார். இந்திய வங்கிகள் சங்கத்துக்கு வங்கிகள் இணைப்பு என்பது முக்கியமான பயிற்சியாகும் எனத் தெரிவித்தார்.
எஸ்பிஐ வங்கியைப் போல் இந்தியாவுக்கு 5 பெரிய வங்கிகள் தேவைமாறிவரும், வளர்ந்து வரும் தேவைகளுக்கேற்ப வங்கிப் பணிகளைத் தரம் உயர்த்த வேண்டியுள்ளதே அவற்றின் இணைப்புக்கான தேவையை ஏற்படுத்துவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Comments