உழவர் உரக்கூட்டுறவு நிறுவனத்தின் நானோ யூரியா தொழில்நுட்பம் வேளாண்துறையில் ஓர் புரட்சி - மத்திய அமைச்சர் அமித் ஷா
இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனத்தின் நானோ யூரியா தொழில்நுட்பம் வேளாண்துறையில் ஓர் புரட்சியாகும் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முதல் தேசியக் கூட்டுறவு மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், உலகில் முதன்முறையாக இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் நானோ தொழில்நுட்பத்தில் நீர்ம யூரியா தயாரித்துள்ளதைப் பாராட்டினார்.
விவசாயிகள் இலாபமடையும் வகையில் வேளாண்துறையை மாற்றும் இந்த உயரிய முயற்சியை ஒட்டுமொத்தக் கூட்டுறவுச் சமூகமும் பாராட்டுவதாகத் தெரிவித்தார். 36 ஆயிரம் கூட்டுறவு நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட இப்கோ உர நிறுவனம் தனது இலாபத்தை முழுவதுமாக ஐந்தரைக் கோடி விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கிறது.
Comments