டி.வி.எஸ் மோட்டர் நிறுவனத்தின் Build to Order திட்டம்...செப்டம்பர் மாதத்துக்கான 100 ஆர்டர்கள் நிறைவு

0 2686

டி.வி.எஸ் மோட்டர் நிறுவனத்தின் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ற வகையில் பைக் வடிவமைத்துக் வழங்கும் திட்டத்தின் செப்டம்பர் மாதத்துக்கான ஆர்டர்கள் நிறைவடைந்துள்ளன. 

Build to order எனப்படும் இந்த திட்டத்தில், அந்நிறுவனத்தின் Apache RR310 ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகள் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப பிரத்யேகமாக வடிவமைத்து வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் அறிமுகம் ஆன இம்மாதம் முதல், 3 மாதங்கள் வரை, மாதம் 100 பைக்குகள் தயாரித்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதத்துக்கான 100 ஆர்டர்களும் நிறைவடைந்ததாகவும், அடுத்த மாதத்துக்கான முன்பதிவு அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்குமெனவும் டி.வி.எஸ் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments