அரசு பணியில் பெண்களுக்கான 40சதவிகிதம் ஒதுக்கீட்டை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்

0 3391

அரசு பணியில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 30 விழுக்காட்டில் இருந்து 40 விழுக்காடாக உயர்த்தியதை கண்டித்து, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் முன்பு சில இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

முன்னதாக போராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்களில் ஒருவரை போலீசார் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து செல்ல முற்பட்ட நிலையில், அவர் போலீசாருடன் செல்ல மறுத்து பிடிவாதம் பிடித்தார். அவரை குண்டுகட்டாக வாகனத்தில் ஏற்றிய போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

சக இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில்,  அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தவறு என போலீசார் கூறியதை அடுத்து கலைந்து சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments