ஆந்திராவில் பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை திருடிச் சென்ற பெண்... சிசிடிவி காட்சிகள்

0 2514

ஆந்திராவில், பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை மருத்துவமனையில் இருந்து திருடிச் சென்ற பெண்ணை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

மச்சிலிபட்ணம் அரசு மருத்துவமனையில், கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட இந்துஜாவுக்கு, பெண் குழந்தை பிறந்தது. அதன் பின் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கணவரின் உறவினர் என இந்துஜாவிடம் அறிமுகமான ஒரு பெண், நாள் முழுவதும் அங்கேயே  இருந்துள்ளார். இந்துஜா மருத்துவரை பார்க்க சென்ற நேரத்தில் அப்பெண்,  குழந்தையை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில் இந்துஜா அளித்த புகாரின் பேரில், 4 தனிப்படை அமைத்து போலீசார் குழந்தையை தேடி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments