இன்று நள்ளிரவில் கரையைக் கடக்கிறது குலாப் புயல்
வங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் காரணமாக, தமிழக துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மீனவர்கள் மற்றும் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிப்பதற்காகவும், முன்னெச்சரிக்கையாக துறைமுகத்தில் இருந்து கப்பல்களை வெளியேற்றுவதற்காகவும் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. கடலூர், நாகை, ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஒடிசாவின் கோபால்பூருக்கு தென் கிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திராவின் காலிங்கபட்டினத்திற்கு 330 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ள குலாப் புயல், மேற்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவில் காலிங்கபட்டினம் - கோபால்பூர் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments