தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக சுப்ரியா சாகு நியமனம்

0 2208

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக சுப்ரியா சாஹூ நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலம், தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சான்று வழங்க லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிவு செய்த  லஞ்ச ஒழிப்புத் துறை, அவரது வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தியது.

இதில், கணக்கில் வராத ரொக்கம், கிலோ கணக்கிலான தங்கம், சந்தன மரப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், வெங்கடாசலத்திற்கு பதிலாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூவை தலைமைச் செயலாளர் இறையன்பு நியமித்துள்ளார்.

இது குறித்த உத்தரவில் சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை செயலாளராக உள்ள சுப்ரியா சாஹு கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தையும் கவனிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments