வங்க கடலில் உருவான குலாப் புயல் இன்று மாலை கலிங்கப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் - வானிலை ஆய்வு மையம்
ஒடிசா, ஆந்திரா கடலோரம் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை குலாப் எனும் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், இன்று மாலை கலிங்கப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் ஒடிசா மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மகாராஷ்ட்ராவின் பல பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை, தானே, புனே உள்ளிட்ட நகரங்களில் நாளை முதல் 29 ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்திலும் புயலின் தாக்கம் இருப்பதால் அரசு ஊழியர்களின் விடுப்பு அக்டோபர் 5ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Comments