பெண் திமிங்கலத்தை காதல் வளையில் வீழ்த்த பின் தொடர்ந்து படை எடுக்கும் 15 ஆண் திமிங்கலங்கள் !

0 2913

ஸ்திரேலியாவில் பெண் திமிங்கலம் ஒன்றை காதல் வளையில் வீழ்த்த 15 ஆண் திமிங்கலங்கள் பின் தொடர்ந்து சென்ற ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஹம்ப்பேக் திமிங்கலங்கள், இடம் பெயரும் போதோ அல்லது இனப்பெருக்கத்தில் ஈடுபடும் போதோ கூட்டமாக சுற்றும் இயல்புடையவை.

பிரிஸ்பேன் கடற்கரை அருகே 15 ஆண் திமிங்கலங்கள் ஒரு பெண் திமிங்கலத்தை 3 மணி நேரம் விரட்டி சென்றன.

ஆண் திமிங்கலங்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபட பெண் திமிங்கலத்தை பின் தொடர்ந்து சென்றிருக்கலாம் அல்லது தன்னோடு இனப்பெருக்கத்தில் ஈடுபட வேண்டிய ஆண் திமிங்கலத்தை தேர்வு செய்ய பெண் திமிங்கலம் தன்னைப் பின் தொடரும் விதமாக ஆண் திமிங்கலங்களின் ஆசையைத் தூண்டி இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments