காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் வேட்பு மனு பரிசீலனையின் போது திமுக - அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு
வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில், வேட்பு மனு பரிசீலனையின் போது திமுக மற்றும் அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் சலசலப்பு உருவானது.
காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று கொண்டிருந்த போது, திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவினரை, திமுகவினர் அலுவலகத்திற்கு பின்னால் கூட்டிச்சென்று வாபஸ் பெற சொல்லியதாக கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இருதரப்பினரிடையை தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Comments