பஞ்சாபில் நாளை புதிய அமைச்சரவை பதவியேற்பு.. 7 புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு?

0 3512

காங்கிரஸ் மேலிடத்துடன் பல முறை ஆலோசனை நடத்திய பின், தனது அமைச்சரவை பட்டியலை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞாயிற்றுக்கிழமை மாலை புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என தெரிவித்தார். சரண்ஜித் சிங் அமைச்சரவையில் 7 பேர் புதுமுகங்களாக இருப்பார்கள் எனவும், முந்தைய அமரீந்தர் சிங் அமைச்சரவையில் இருந்த 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமரீந்தர் சிங் ராஜினாமா செய்ததை தொடர்ந்து முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சரண்ஜித் சிங்கும், துணை முதலமைச்சர்களாக இரண்டு பேரும் கடந்த 20 ஆம் தேதி பதவி ஏற்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments