ஆப்கானிஸ்தானில், ஆரம்ப பள்ளிகளுக்கு உற்சாகமாகத் திரும்பிய மாணவிகள்
ஆப்கானிஸ்தானில், ஆரம்ப பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மீண்டும் பள்ளிகளுக்குத் திரும்பினர்.
ஆகஸ்ட் மாதம் ஆப்கானை மீண்டும் தாலிபான்கள் கைப்பற்றியதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த ஆட்சியின் போது பெண் கல்விக்குத் தடை விதித்த தாலிபான்கள் இம்முறை மாணவர்களும், மாணவிகளும் ஒருவரை ஒருவர் பார்க்காத வண்ணம் வகுப்பறையின் குறுக்கே திரை அமைத்து வகுப்புகளை நடத்துமாறு உத்தரவிட்டனர்.
கடந்த வாரம் முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளித்த தாலிபான்கள் ஆரம்ப பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதி அளித்துள்ளனர். இதனால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் எதிர்காலம் கேல்விக்குறியாகி உள்ளது.
Comments