வாகன தகுதிச்சான்று சோதனை மையங்களை அமைக்க தனியாருக்கு அனுமதி
தனியார் மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்குவதற்கான தானியங்கி சோதனை மையங்களை திறக்க, மாநில அரசுகள், நிறுவனங்கள் -அவற்றின் துணை நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் நடைபெறும் தகுதி சோதனைகளில், வாகனங்கள் தகுதிச்சான்று தேர்வில் தோற்றுவிட்டால், உரிய கட்டணம் செலுத்தி மறு தகுதி சோதனைக்கு வாகன உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம். மறு தகுதி சோதனையிலும், வாகனம் இயக்கத் தகுதியற்றது என முடிவானால் அத்துடன் அது காலாவதியான வாகனமாக கருதப்படும்.
முதற்கட்டமாக 75 தகுதி சோதனை மையங்களையும், அதன் பின்னர் 450 முதல் 500 மையங்களையும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 25 மையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு அவற்றில் 7 மையங்கள் செயல்படத் துவங்கி உள்ளன.
Comments