மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் சிக்கிய சந்தன மரப்பொருட்கள் வனத்துறையிடம் ஒப்படைப்பு

0 3062
மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் சிக்கிய சந்தன மரப்பொருட்கள் வனத்துறையிடம் ஒப்படைப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவரும் ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியுமான வெங்கடாசலம் வீட்டில் சிக்கிய சந்தன மரப்பொருட்களை, போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

வெங்கடாசலம் வீடு, அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில், கணக்கில் காட்டப்படாத 13.5 லட்சம் ரூபாய் பணம், சுமார் 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தன மரப் பொருட்கள் சிக்கின. வெங்கடாசலம் வனத்துறையில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த காலகட்டத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சந்தன மரங்களால் பொருட்களை செய்து தனது வீட்டில் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 சந்தன சிலைகள் உள்ளிட்ட கலை பொருட்கள், சந்தன கட்டைகள் தலைமை வன பாதுகாப்பு அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. வெங்கடாசலம் மீது வனத்துறை சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments