பள்ளிகள் திறந்தவுடன் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2676

பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை துவங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக் கோரிய பொதுநல வழக்கு  மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அடுத்த சில வாரங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என செய்திகள் வெளியாவதாக குறிப்பிட்ட  நீதிபதிகள், பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை துவங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments