யானையை மீட்கும் பணியை படம்பிடிக்க சென்ற போது விபரீதம்..! படகு கவிழ்ந்ததில் செய்தியாளர் உயிரிழப்பு

0 3166

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் யானை மீட்கப்படுவதை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மகாநதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

முன்டலி என்ற இடத்தில் தண்ணீரில் சிக்கியிருந்த யானையை மீட்க, பேரிடர் விரைவு நடவடிக்கை குழுவினர் 5 பேர் படகில் சென்றனர். அவர்களுடன் செய்தியாளர் அரிந்தம் தாஸ் மற்றும் கேமரா மேன் பிரபாத் சின்ஹா ஆகியோரும் படகில் இருந்தனர். திடீரென படகு கவிழ்ந்ததில் செய்தியாளர் அரிந்தம் தாஸ் பரிபாபமாக இறந்தார்.

மற்ற அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைச்க்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.செய்தியாளர் அரிந்தம் தாஸின் மறைவுக்கு, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments