ஜோதிகா படத்தால் போக்சோ குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை..! பொன்மகள் புகாரில் நடவடிக்கை

0 4395
நடிகை ஜோதிகா நாயகியாக தோன்றிய பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்து விழிப்புணர்வடைந்த சிறுமி ஒருவர், தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து தாய் மூலம் போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் உறவினரான பாலியல் அரக்கனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

நடிகை ஜோதிகா நாயகியாக தோன்றிய பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்து விழிப்புணர்வடைந்த சிறுமி ஒருவர், தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து தாய் மூலம் போலீசில் புகார் அளித்தார்.  இந்த வழக்கில் உறவினரான பாலியல் அரக்கனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை பிராட்வே ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில் அவர்களின் 9 வயது மகளை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இராயபுரத்தில் உள்ள கணவரின் மாமா வீட்டில் விட்டுச் சென்றுள்ளார் .

ஐந்து மாதங்கள் கழித்து சிறுமியை தாய், தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் . அப்போது சிறுமி வீட்டில் தொலைக்காட்சியில் ஜோதிகா நடித்த பொன்மகள் படத்தில் வரும் காட்சிகளை பார்த்துள்ளார். அந்த படத்தில் தாயிடம் எதையும் மறைக்க கூடாது என வசனங்கள் வருவதை கண்டு விழிப்புணர்வு அடைந்த அந்த சிறுமி, உறவினரான கணேசன் மூலம் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் இராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கனேசணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஓராண்டாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கணேசனின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, கணேசனை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி ராஜலட்சுமி குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்து, நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments