வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு

0 2875

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.

கனமழை காரணமாக 21.20 அடி மொத்த உயரம் கொண்ட புழல் ஏரி நீர்மட்டம், 20.21 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், புழல் ஏரியில் நீர் இருப்பு, மதகுகள், உபரி நீர் செல்லும் கால்வாய் உள்ளிட்டவை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தலைமைச் செயலாளர் கேட்டறிந்தார்.

இதன் தொடர்ச்சியாக பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments