சிலியில் நோயாளிகளை மகிழ்விக்க மருத்துவமனைக்குள் சிறப்பு பயிற்சி பெற்ற நாய்களுக்கு அனுமதி
சிலியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை மகிழ்விக்க, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சான் மிகுவெலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிரத்யேக பயிற்சி பெற்ற நாய்கள் இதற்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு நோயாளிகளுடன் கொஞ்சிக் குலாவ அனுமதிக்கப்பட்டுள்ளன.
செல்லப்பிராணி நாய்களின் துணையுடன் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சையால் அவர்களது வலி, பதற்றம், மன அழுத்தம், சோர்வு உள்ளிட்டவை குறைவதாக கூறப்படுகிறது.
Comments