அரசு ஏ.சி. பஸ்கள் அக்.1 முதல் மீண்டும் இயக்கப்படும் என அறிவிப்பு

0 2848

அரசுப் போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த ஏசி பஸ்கள் வரும் 1-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நோய்த் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி 702 ஏசி பஸ்கள் இயக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். கொரோனாவால் கடந்த மே மாதம் முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படாமல் இருந்த ஏசி பேருந்துகள், மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், 60 நகர பேருந்துகள், 642 புறநகர் ஏசி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்திய பிறகுதான் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments