நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலைவாய்ப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவு
நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அறிவிக்கப்பட்ட, 100கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களிலும், ஏனைய மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலமும், 7 நகராட்சிகள், 37 பேரூராட்சிகளிலும் இந்த ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. திட்ட பயனாளிகளுக்கான வயதுவரம்பு 18 முதல் 60 வயது வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தினக்கூலி அடிப்படையிலான பணி என்றாலும் வார இறுதியில் ஊதியம் வழங்கப்படும்.
Comments