காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த புதிய வழி... வயல்களில் வைக்கோலை எரிக்காமல் மட்கச் செய்வதற்கு டெல்லி அரசு திட்டம்
நெல் அறுவடைக்குப் பின் வயலில் கிடக்கும் வைக்கோலை எரிக்காமல் பூஞ்சாணம் தெளித்து மட்கச் செய்வதற்கு டெல்லி மாநில அரசு ஒரு திட்டத்தைத் தீட்டியுள்ளது.
பஞ்சாப், அரியானா மாநிலங்களில் வயல்களில் வைக்கோலை எரிப்பதால் டெல்லியில் புகைமூண்டு காற்று மாசுபடுகிறது. இதைத் தடுக்கப் பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து டெல்லி மாநில அரசு ஒரு தீர்வை உருவாக்கியுள்ளது.
உயிரிப் பூஞ்சாணம் கொண்ட கேப்சூலைத் தண்ணீரில் கரைத்துத் தெளித்துவிட்டால் வைக்கோல் 20 நாட்களில் மட்கி உரமாகும். 50 இலட்ச ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டம் அக்டோபர் ஐந்தாம் நாளுக்குள் தயாராகிவிடும் என டெல்லிச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
Comments