"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மகப்பேறு காலத்தில் பெண் எம்பிக்களுக்கு விடுமுறை அளிக்கும் விவகாரம்... பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி
தாய்மை அடைந்த பெண் எம்.பிக்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தொழிலாளர் கட்சியின் எம்பி. ஸ்டெல்லா கிரீசி தனது கைக்குழந்தையை மார்போடு அணைத்தபடி இக்கோரிக்கையை முன்வைத்தார்.
பெண்களுக்கு விடுமுறைக் காலத்தை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது அமைதியுடன் இருந்த அந்தப் பெண்ணுக்கும் அவர் கைக்குழந்தைக்கும் பிரதிநிதிகள் சபையின் அவைத் தலைவர் ஜேக்கப் ரீஸ் மோக் பாராட்டு தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு கிரீஸி தாய்மை அடைந்த போது அவருக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்ட போதும் தொகுதிப் பணிகளை மட்டும் செய்ய அனுமதிக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் பேசவோ வாக்களிக்கவோ அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை
Comments