நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின்
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகை மீரா மிதுன் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக்கை கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
ஒரு மாதத்துக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. இதையடுத்து மீரா மிதுன் புழல் மகளிர் தனிச் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
Comments