பஞ்சாப் அணி வீரர் தீபக் ஹூடா வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை ; பிசிசிஐ-யின் சூதாட்ட தடுப்பு பிரிவு, ஹூடாவிடம் விசாரிக்க உள்ளதாக தகவல்
துபாயில் கடந்த செவ்வாயன்று நடைபெற்ற ஐபில் போட்டிக்கு முன் பஞ்சாப் அணி வீரர் தீபக் ஹூடா வெளியிட்ட புகைப்படம் சர்ச்சைக்குள்ளாகியது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன் தீபக் ஹூடா, தான் ஹெல்மட் அணிவது போன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் வைராலானது.
ஒரு போட்டியில் விளையாட உள்ள வீரர்களின் விபரங்களை முன்கூட்டியே வெளியிடுவது பிசிசிஐ விதிகளின்படி தவறானது. இதனை அடுத்து, தனது புகைப்படத்தை வெளியிட்டு சூதாட்ட தரகர்களுக்கு தீபக் ஹூடா சிக்னல் கொடுத்திருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் பிசிசிஐ-யின் சூதாட்ட தடுப்பு பிரிவு, தீபக் ஹூடாவிடம் விரைவில் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments