பானிபூரி சாப்பிடலாமா?.. கண்காணிக்கப்படும் வடக்கன் பாய்ஸ்...!

0 12216
பானிபூரி சாப்பிடலாமா?.. கண்காணிக்கப்படும் வடக்கன் பாய்ஸ்...!

சென்னையில் தள்ளு வண்டியில் சுகாதாரமற்ற முறையில் பானிபூரி விற்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு கடிவாளம் போட உணவு பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.

உணவே மருந்து... மருந்தே உணவு... என வாழ்ந்தனர் நமது முன்னோர்கள். கம்பு, கேழ்வரகு, தினை, சோளம் போன்ற சத்தான உணவு வகைகள் சாப்பிட்டு நூறு வயது கடந்தும் ஆரோக்கியமாக இருந்தனர். காலம் மாற மாற நமது உணவு பழக்கவழக்கங்களும் மாறி வருகிறது. பீட்சா, பர்கர் வரிசையில் பானிபூரியும் இடம்பிடித்து விட்டது.

சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை பானிபூரியை விரும்பி உண்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களை குறி வைத்து சென்னையில் தள்ளுவண்டியில் பானிபூரி விற்கும் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு சென்னை பட்டரவாக்கம் ரெயில் நிலையம் அருகே புழு இருந்த கெட்டுப்போன உருளைக்கிழங்கை பயன்படுத்தி பானிபூரி விற்ற நபரை, அப்பகுதி மக்கள் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பானிபூரியில் புழு இருந்த சம்பவம் பானிபூரி விரும்பி சாப்பிடுவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட தள்ளு வண்டியில் சுகாதாரமற்ற முறையில் பானிபூரியை விற்று வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.

ஒரே இடத்திலிருந்து வியாபாரம் செய்யும் பானிபூரி கடைக்கு மட்டும் உணவுத்துறை அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளது. மீதமுள்ள 95 சதவீத பானிபூரி கடைகளுக்கு உணவுத்துறை அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இது குறித்து அவர்களிடம் விழிப்புணர்வும் இல்லை. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருந்து அங்கீகரிக்கப்பட்ட கடையில் பானிபூரியை வாங்கி உண்ண வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பானிபூரியோ, அல்லது பிரியாணியா... அங்கீகரிக்கப்படாத கடைகளில் வாங்கி சாப்பிடுவது, உடல் ஆரோக்கியத்திற்கு உலை வைத்து, சொந்த காசில் சூனியம் வைத்தது போல் ஆகி விடும் என்பதே மறுக்க முடியாத உண்மை...

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments