ஆன்ட்ராய்ட் பயனர்களை குறிவைக்கும் புதிய மால்வேர் தாக்குதல் - மத்திய அரசு எச்சரிக்கை
ஆன்ட்ராய்ட் செல்பேசி பயனர்கள், புதிய வகை மால்வேர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம் என மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு CERT-In எச்சரித்துள்ளது.
Drinik என்ற புதிய வகை மால்வேர், ஆன்ட்ராய்ட் போன்களில் ஊடுருவி வங்கி விவரங்களை திருடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 27 இந்திய வங்கிகளின் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை அனுப்புவது போல் போலி குறுஞ்செய்தி அனுப்பி அதன் வாயிலாக செல்போனுக்குள் ஹேக்கர்கள் ஊடுருவுகின்றனர். குறுஞ்செய்தியில் உள்ள இணையதள முகவரிக்குள் உள்நுழைந்தபின் தரவிறக்கமாகும் செயலி, செல்போனின் எஸ்எம்எஸ், அழைப்பு விவரங்களை கண்காணிக்கத் தொடங்கும்.
பின்னர் படிப்படியாக பான், ஆதார் எண், டெபிட் கார்டு விவரங்கள் உள்ளிட்ட வங்கி தொடர்பான விவரங்கள் களவாடப்படும்.
Comments