சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து 2 அடி உயரமுள்ள சிவ லிங்கம் கண்டெடுப்பு

0 2310
சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து 2 அடி உயரமுள்ள சிவ லிங்கம் கண்டெடுப்பு

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் அருகே சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெப்பக்குளம் முதல் விரகனூர் இடையே சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கொந்தகை கால்வாய் பகுதியில் பள்ளம் தோண்டப்பட்ட போது அங்கு 2 அடி உயரமுள்ள சிவ லிங்கம் ஒன்று தென்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், சிவ லிங்கத்தை மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர். முதற்கட்ட ஆய்வில் இது சதுஸ்ர வடிவ லிங்கம் என்றும், கிபி 11ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments