"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
பிரதமர் டிஜிட்டல் நலவாழ்வுத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கான அறிவிப்பை செப்டம்பர் 27ஆம் தேதி வெளியிடுகிறார் பிரதமர் மோடி
பிரதமர் டிஜிட்டல் நலவாழ்வுத் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கான அறிவிப்பை செப்டம்பர் 27ஆம் நாள் பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
இந்தத் திட்டம் இப்போது அந்தமான், இலட்சத்தீவு, புதுச்சேரி உள்ளிட்ட ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமுள்ள டிஜிட்டல் நலவாழ்வு அடையாள அட்டை வழங்கப்படும்.
அதில் ஒருவருடைய மருத்துவம், உடல்நலம் சார்ந்த அனைத்துத் தகவல்களுடன் ஆதார், செல்பேசி எண் ஆகியன அடங்கியிருக்கும். நலவாழ்வு அடையாள அட்டை, மருத்துவர்களின் பதிவு, மருத்துவமனைப் பதிவு என்கிற மூன்று தளங்களில் தேசிய அளவில் இது செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments