திருச்சி விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்ஸிகள் பறிமுதல்

0 4112

திருச்சி விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்ஸிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் சார்ஜா செல்லும் பயணிகளிடம் விமானம் புறப்படும் முன் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காரைக்குடியைச் சேர்ந்த சரவணன் என்பவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக அமெரிக்க டாலர், துபாய் திர்ஹம்  உள்ளிட்ட கரன்ஸிகளை தனது உடைமைகளில் மறைத்து வைத்து கடத்தி செல்ல முயன்றது  கண்டுப்பிடிக்கப்பட்டது.

அவற்றின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 80 லட்சம் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments