கொடைக்கானலில் காட்டு யானைகள் அட்டகாசம்... சுற்றுலாத் தலங்கள் இன்று முதல் மூடல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மோயர் சதுக்கத்தில் காட்டு யானைகள் புகுந்து கடைகளை சேதப்படுத்தியதை அடுத்து, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான மோயர் சதுக்கத்தில், நேற்று இரவு 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்து, அங்குள்ள கடைகளையும், தடுப்பு வேலிகளையும் சேதப்படுத்தியது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, இன்று முதல் குணா குகை, பில்லர் ராக், பைன் மர சோலை, மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சுற்றுலாத் தலத்தை பார்க்க முடியாமல், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர்.
Comments