தமிழ்நாட்டில் காலியாக இருந்த 2 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல்: திமுக சார்பில் போட்டியிட்ட இரண்டு பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
தமிழகத்தில் காலியாக இருந்த 2 மாநிலங்களவை இடங்களுக்கு திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
கே.பி.முனுசாமி, வைத்திலிங்கத்தின் ராஜினாமாவை தொடர்ந்து, தமிழகத்தில் 2 ராஜ்யசபா எம்.பி. பதவியிடங்கள் காலியானது. இதற்கு வேட்புமனுதாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், பத்மராஜன், புஷ்பராஜ் ஆகியோரது வேட்பு மனுக்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த டாக்டர் கனிமொழி சோமு மற்றும் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது.
Comments