பருவநிலை மாற்றம் விவகாரத்தில் உலக நாடுகளின் மனிதநேய அணுகுமுறை மேலும் வளர வேண்டும் - போரிஸ் ஜான்சன்
பருவநிலை மாற்றம் விவகாரத்தில் உலக நாடுகளின் மனிதநேய அணுகுமுறஐ மேலும் வளர வேண்டும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா.பருவநிலை மாநாடு அக்டோபர் 31-ஆம் தேதி கிளாஸ்கோவில் நடக்க இருக்கும் நிலையில், ஐ.நா.பொது சபை கூட்டத்தில் பேசிய போரிஸ் ஜான்சன், பருவ நிலை மாற்றத்தால் எற்படும் அழிவுக்கு பொறுப்பேற்பதுடன், அதிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என கூறினார்.
2010-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2030 ஆம் ஆண்டில் கரியமில உமிழ்வு 16 சதவீதம் அதிகரிக்கும் என ஐ.நா.வின் ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பேரழிவு ஏற்படுத்தும் பருவநிலை மாற்றத்திலிருந்து உலகை காக்க, 2030 ஆம் ஆண்டுக்குள் கரியமில உமிழ்வை 45 சதவீதம் குறைக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Comments