மண் சரிந்ததால் தெப்பக்குளத்தில் லாரி கவிழ்ந்த வீடியோ காட்சி... 2 கிரேன்களின் உதவியுடன் மீட்கப்பட்டது
ஆப்கான் மண்ணை தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தக் கூடாது.. ஜி 20 மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் உரை
ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து தீவிரவாதம் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை தாலிபனின் புதிய அரசு உலக நாடுகளுக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் ஆற்றிய உரையில் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டுப் போரால் வாழ்வாதாரம் இழந்த ஆப்கான் மக்களுக்குத் தேவையான மனிதாபிமான ரீதியான உதவிகளை வழங்குவதற்கு உலக நாடுகள் ஓரணியில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் தேவை என்று நீண்டகாலமாக இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில் பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட ஜி 4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நியுயார்க்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Comments